முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணலி மண்டல அலுவலக அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை

புதன்கிழமை, 15 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நீரிழிவு  ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு  சிறப்பு சிகிச்சை முகாம்கள் நடத்தி  கொரோனா உயிரிழப்பு சதவீதத்தை தவிர்க்க வேண்டும் என்று மணலி மண்டல அலுவலக அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டார். 

சென்னை மாநகராட்சியின் மணலி மண்டலத்தில்  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார், அப்போது அவர் பேசுகையில்,

சென்னை மாநகராட்சியின் மண்டலமான மணலி, நோய்தொற்று பாதிப்பில் கடைசி மண்டலமாக கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் 1419 பேர் நோய்ததொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 1135 பேர் பூரண குணமடைந்திருக்கிறார்கள் என்று நமக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாகவும் நம்பிக்கை அளிக்கும் தகவலாகவும் இருக்கிறது.

இந்த மண்டலத்தில்  இறப்பு சதவீதமும்  ஜீரோவாக இருக்க வேண்டும் மாறாக நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையாலும் இணை நோய்களின் காரணமாகவும் 18 பேர் உயிரிழந்திருப்பது கவலையளிக்கிறது, பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கில் எப்படி மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தார்களோ அதே போல பொது ஊரடங்கின்போதும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் முழு அளவில் உருவாக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும். 

மணலி மண்டலத்தில் கிட்ட தட்ட ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 868 பேர் வாழ்கிறார்கள், இந்த மக்களை பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக  மாநகராட்சி அதிகாரிகள் பாடுபட்டு வருகிறார்கள். எனவே மக்கள் முழு ஊரடங்கு உத்தரவின் போது கொடுத்த ஒத்துழைப்பை பொது ஊரடங்கின் போதும் தர வேண்டும்,

மக்கள் கூடும் இடங்களான மீன் மார்க்கெட் காய்கறி மார்க்கெட் மற்றும் உள்ள பகுதிகளில்  சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,  முகக்கவசம் அணிய செய்வதில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில் மக்களை கண்காணித்து அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும், இல்லையேல் அபராதம் விதிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த பறக்கும் படைகளை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  முதல்வர் அறிவித்த  காய்ச்சல் சிகிச்சை முகாம்கள் நல்ல பயனை தந்துக்கொண்டிருக்கிறது. அதனை தொற்று எங்கெங்கே இருக்கிறதோ அங்கெல்லாம் காய்ச்சல் சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும்.

அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அதிகாரிகளான நீங்களும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் ஏனெனில் தடுப்பு மருந்துகள் இந்த நோய்க்கு கிடையாது

இருப்பின் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகளான நீங்கள் குணப்படுத்தி வருகிறீர்கள். இருந்தாலும் சவாலான காலக்கட்டத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

திருவொற்றியூர் மண்டலத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தொகை இருக்கிறது, அங்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வர்கீஸ் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக  15 ஆயிரம் பேர் நீரிழிவு நோய், புற்றுநோய், இதயநோய் மற்றும் உள்ள இணை நோய்கள் உள்ளவர்களை கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே அவர்களுக்கு பரிசோதனை நடத்தி சிறப்பு மருத்துவமுகாம்களை நடத்தி வருகிறார்கள். 

அதே போன்ற சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும். அதன் மூலம் உயிரிழப்பு சதவீதத்தை முழுமையாக குறைக்க முடியும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார், 

இந்த நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமர், மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன், மண்டல அலுவலர் ராஜசேகர், அ.தி.மு.க. நிர்வாகிகள் கிருஷ்ணன், தங்கசிவம், ராகவா சாக்ரட்டீஸ், ஜோசப்;, ராஜேஷ்சேகர், சாரதிபார்த்தீபன், காமராஜ், ஜெய்சங்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து