முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாயிடமிருந்து தன் தங்கையை காப்பாற்றிய 6 வயது சிறுவன்: ஹாலிவுட் நட்சத்திரங்கள் பாராட்டு

வியாழக்கிழமை, 16 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

அமெரிக்காவில் நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றிய 6 வயதுச் சிறுவன் பற்றிய பதிவு வைரலாகியுள்ளது.

கடந்த 9-ம் தேதி அன்று அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தின் சயன் நகரில் வசித்து வரும் பிரிட்ஜர் என்ற சிறுவன், தனது தங்கையை ஒரு நாய் கடிக்க வருவதைப் பார்த்து, உடனடியாக முன்னால் பாய்ந்து தடுத்துள்ளார். இதனால் பிரிட்ஜரின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. ஆனாலும், தங்கையை இழுத்துக் கொண்டு வேகமாக ஓடிக் காப்பாற்றியுள்ளார். இதுகுறித்து பிரிட்ஜரின் அத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
என் சகோதரரின் மகன் ஒரு ஹீரோ. தாக்க வந்த நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றியிருக்கிறான். அவனே முன்னால் வந்து நின்று தங்கையைப் பாதுகாக்க நாயின் கடிக்கு ஆளாகியுள்ளான். இது பற்றி கேட்ட போது, அங்கு யாராவது இறந்து போக வேண்டும் என்று இருந்திருந்தால் அது நானாக இருக்கட்டும் என்று நினைத்தேன் என்று சொன்னான். நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான்.  அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட மற்ற நாயகர்களிடம் இந்தத் தகவலைச் சென்று சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களுக்குத் துணையாக இன்னொரு நாயகன் வந்திருக்கிறான் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது அவர்கள் வரை செல்லுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன்.  இவ்வாறு பிரிட்ஜரின் அத்தை கூறியுள்ளார்.  இந்தத் தாக்குதலில் பிரிட்ஜரின் முகம் படு மோசமாக காயமடைந்துள்ளது. கிட்டத்தட்ட 90 தையல்கள் பிரிட்ஜரின் முகத்தில் போடப்பட்டுள்ளன. ஆனாலும், பிரிட்ஜர் நம்பிக்கையுடன் இருப்பதாக அவரது அத்தை தெரிவித்துள்ளார். பிரிட்ஜர் பற்றிய பதிவைப் பகிர்ந்திருக்கும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் மார்க் ரபல்லோ மற்றும் ஆன் ஹாத்வே ஆகியோர், அவரது துணிச்சலை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து