முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேச கேபினட் அமைச்சர் கமலா ராணி கொரோனாவுக்கு பலி

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த உத்தர பிரதேச மாநில கேபினட் அமைச்சர் கமலா ராணி வருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் கேபினட் அமைச்சரவையில் இடம் பிடித்திருந்தவர் கமலா ராணி வருண்.

58 வயதான இவருக்கு கடந்த மாதம் ஜூலை 17-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் நேற்று அயோத்தி சென்று ராமர் கோவில் பூமி பூஜை குறித்து ஆய்வு செய்ய இருந்தார். கேபினட் அமைச்சர் உயிரிழந்ததை தொடர்ந்து முதல்வர் யோகி தனது அயோத்தி பயணத்தை ரத்து செய்துள்ளார்.

கேபினட் அமைச்சரின் மறைவிற்கு உத்தர பிரதேச முதல்வர்  யோகி ஆதித்ய நாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-  கேபினெட் அமைச்சர் கமல் ராணி வருண் மறைவுக்கு  ஆழ்ந்த இரங்கலை அவரின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கிறேன்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பி.ஜி.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் கமல் ராணி. மக்கள் மத்தியில் புகழ்பெற்ற தலைவராகவும், சமூக சீர்திருத்த தலைவராகவும் ராணி திகழ்ந்தார்.

அமைச்சராக  பொறுப்பேற்று மிகவும் திறமையாகச் செயல்பட்டவர் கமல் ராணி எனத் தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் எம்.எல்.ஏ. கமல் ராணி வருண்  என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து