அமித்ஷாவுக்கு கொரோனா எதிரொலி: தனிமைப்படுத்திக் கொண்டார் : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      இந்தியா
Ravi Shankar Prasad 2020 08 03

Source: provided

புதுடெல்லி : உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டார். டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த போது மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். 

தற்போது அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாக கூறிய நிலையில், மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக் கொண்டனர்.

அதன்படி அமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் உடல்நிலை சீராக இருப்பதாக அமித் ஷா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சந்தித்தார். இதையடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டார் என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து