முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய ராணுவத்திற்காக போரிட்ட இந்திய மாணவனை கைது செய்தது உக்ரைன் படை: வீடியோ வெளியீடு

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2025      உலகம்
Jail

கீவ், ரஷ்யாவுக்காக போரிட்ட இந்திய மாணவர் உக்ரைன் படையால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தன்னை 

மீட்கக்கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 397வது நாளாக போர் நீடித்தது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ரஷ்யாவுக்கு படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிக சம்பளம் போன்ற ஆசைகளால் படிக்க செல்லும் மாணவர்கள் பலர் ராணுவத்தில் சேரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த முகமது ஹுசைன் என்ற மாணவர் ரஷ்யாவுக்கு உயர் கல்வி படிக்க சென்றுள்ளார். ஆனால், அவர் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த நிலையில் போரில் உக்ரைன் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது உக்ரைனில் கைதியாக உள்ள முகமது ஹுசைன் தன்னை மீட்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முகமது உக்ரைன் ராணுவத்தின் பிடியில் உள்ள நிலையில் அவர் பேசும் வீடியோவை உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து