Idhayam Matrimony

பாதுகாப்பு, அமைதியான மாநிலம் தமிழ்நாடு: த.வெ.க. கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் முகமது பேச்சு

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2025      தமிழகம்
Vijay-1-2025-12-22

சென்னை, ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார். இந்தநிலையில் த.வெ.க.வின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், அக்கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் முகமது அலி கலந்து கொண்டு பேசியதாவது:-

வணக்கம். நான் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகிறேன். ஆனால் எனது மகன் பெயர் ஜீசஸ். மூத்த மகன் பெயர் ஆப்ரகாம். நாங்களும் மேன்மை தாங்கிய இயேசு கிறிஸ்து, அன்னை மேரி மீது நம்பிக்கை வைத்து இருக்கிறோம். அப்படி இல்லையெனில் நாங்கள் முஸ்லிமே அல்ல. நான் இயேசு கிறிஸ்துவை நம்பவில்லை எனில் நான் முஸ்லிமே கிடையாது. நான் இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைக்க வேண்டும்; அது தான் என்னை உண்மையான முஸ்லிம் ஆக்குகிறது. 

ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது என்றார். த.வெ.க. தலைவர் விஜய் தொடர்ந்து தி.மு.க. அரசை விமர்சனம் செய்து வரும் நிலையில்,ஆற்காடு நவாப்பின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து