குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் 8 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்: பிரதமர் மோடி அறிவிப்பு

வியாழக்கிழமை, 6 ஆகஸ்ட் 2020      இந்தியா
modi 2020 08 01

கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். இந்த  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபத்தில்  உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர  தீ விபத்தில் சிக்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் பலியாகினர்.  மேலும், 40 கொரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பத்திரமாக மீட்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்த அனைவரும் ஐ.சி.யூ.-வில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து