அம்மா பேரவை துணைத்தலைவர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில் மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு நிவாரண உதவிகள் : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Minister Sellur K Raju 2020 08 02

Source: provided

மதுரை : மதுரை ஆரப்பாளையம் மதிதியேட்டர் அருகே மேற்கு 2 - ம் பகுதி அம்மா பேரவை துணைத்தலைவர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில் தமிழ்நாடு மேடை மெல்லிசை  கலைஞர்களுக்கு  நிவாரண உதவிகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவழங்கினார்.

கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் வார்டு,வாரியாக நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 4 மாத காலமாக நடந்து வருகிறது.

இந்த நிவாரண உதவிகளை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ அவரது சொந்த செலவில் வழங்கி வருகிறார். இதுவரை 2 லட்சம் குடும்பங்களுக்கு மேல் நிவாரண உதவிகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

அதன் ஒரு பகுதியாக மதுரை பழங்காநத்தத்தில் மேற்கு 2 - ம் பகுதி அம்மா பேரவை துணைத்தலைவர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரிசி,பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார். 

மதுரை ஆரப்பாளைம் பகுதியில் உள்ள மதி தியேட்டர் அருகில் தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு மேற்கு 2 - ம் பகுதி அம்மா பேரவை துணைத்தலைவர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, முன்னாள் கவுன்சிலர் சப்னாதினேஷ், வட்ட செயலாளர் விருமாண்டி மற்றும் தலைவர் ஜெ.பி.விஜய், ஞானசேகரன் பாண்டிச்செல்வி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து