போதை பொருள் வழக்கு: நடிகை ரியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

வெள்ளிக்கிழமை, 11 செப்டம்பர் 2020      சினிமா
Riya 2020 09 11

Source: provided

மும்பை : போதைபொருள்கள் வாங்கிய வழக்கில் நடிகை ரியாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கியதாகவும், அதற்காக பணம் கொடுத்ததாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் விசாரணையின் போது அதனை ரியா ஒப்பு கொண்டதாகவும் தெரிவித்து உள்ளனர். 

இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ரியா தனது வக்கீல் மூலம் ஜாமீன் கேட்டு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தன்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாக கூறியுள்ளார்.

மேலும் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தெரிவித்து இருந்தார்.  ரியாவின் ஜாமீன் மனு மீது நேற்று தீர்ப்பளித்த மும்பை செசன்ஸ் நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து