ஐ.எஸ் அமைப்பின் 85 மைல் தூர குகையை ஏவுகணை வீசி தாக்கி அழித்த இங்கிலாந்து விமானப்படை

திங்கட்கிழமை, 14 செப்டம்பர் 2020      உலகம்
UK-Air-Force 2020 09 14

Source: provided

லண்டன் : ஐ.எஸ் அமைப்பின் 85 மைல் தூர குகையை ஏவுகணை கொண்டு இங்கிலாந்து விமானப்படை தாக்கி அழித்துள்ளது.

இங்கிலாந்தின் ராயல் விமானப்படைக்கு சொந்தமான விமானம் கடந்த மாதம் வடக்கு ஈராக்கில் ஐ.எஸ் பகுதிகளில் இரண்டு தாக்குதல்களை நடத்தியது என பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அவற்றில் ஒன்று ஐ.எஸ். நிலத்தடியில் கட்டமைத்த 85 மைல் குகை என்று நம்பப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை படி, ஐ.எஸ். - க்கு எதிரான போராட்டத்தில் உலகளாவிய கூட்டணிக்கு இங்கிலாந்து அளித்த பங்களிப்பின் ஒரு பகுதியாக, சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக ராயல் விமானப்படை தொடர்ந்து தினசரி பயணங்களை மேற்கொண்டு வருகிறது.

எங்கள் விமானம் தேவைப்படும் போது பயங்கரவாத இலக்குகளை தாக்கும்.வடக்கு ஈராக்கில் கிர்குக்கிற்கு மேற்கே நிலத்தடியில் 85 மைல் குகையை ஐ.எஸ் தலைமைக் குழு நிறுவியிருப்பதை புலனாய்வு உறுதிப்படுத்தியது. ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை அதிகாலையில் ராயல் விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானமான ரீப்பர் அந்த இடத்தை உன்னிப்பாகக் கவனித்துவந்தது.

குகை நுழைவாயிலில் பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டபோது, ரீப்பரின் குழுவினர் கட்டுப்பாட்டு அறையில் இருந்த படி ஏவுகணை மூலம் தாக்குதலை நடத்தினர். ஏவுகணை இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது,

குகையில் மற்றொரு வாயில் குண்டுவெடிப்பு வெளிப்படுவதைக் காண முடிந்தது. இது குகைகளுக்குள் ஏவுகணை தாக்குதலின் விளைவு ஆழமாக எட்டியிருப்பதை வெளிப்படுத்தியது. 

இரண்டாவது தாக்குதல், ஆகஸ்ட் 26 புதன்கிழமை ராயல் விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானமான ரீப்பர் இரண்டாவது ஐ.எஸ். பகுதியை நிலையைத் தாக்கி, வடக்கு ஈராக்கில் கூட்டுப்படையின் விமானத் தாக்குதலுக்கு கண்காணிப்பு ஆதரவை வழங்கியது.

ஆகஸ்ட் 26 புதன்கிழமை ராயல் விமானப்படையின் ரீப்பர் இப்பகுதியில் உள்ள மற்றொரு குகைகளை கண்காணிக்கும் பணயில் ஈடுபட்டது, அந்த இடத்தில் பல ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருப்பதை உறுதிப்படுத்தியது.

குகைகளில் ஒன்றின் வாயில் பயங்கரவாதிகள் காணப்பட்டபோது, ரீப்பரின் குழுவினர் ஏவுகணையுடன் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தினர்.

பின்னர் கூட்டுப்படையின் இரண்டு அதிவேக ஜெட் விமானங்கள் நடத்திய தொடர்ச்சியான தாக்குதலுக்கு ராயல் விமானப்படை தனது கண்காணிப்பு வழங்கியது. கூட்டுப்படை மீதமுள்ள ஐ.எஸ். நிலையைத் தாக்கியது என இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து