தமிழக சட்டசபையில் 19 மசோதாக்கள் தாக்கல்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      தமிழகம்
ops 2020 09 16-2

Source: provided

சென்னை : தமிழக சட்டசபையில் நேற்று 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த திங்கட்கிழமையன்று சட்டசபை கூடியது. நேற்று முன்தினம் 5 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், துரை கண்ணன், கடம்பூர் ராஜூ, கே.சி. வீரமணி ஆகியோர் அவர்களது துறையின் சார்பில் இந்த மசோதாக்களை தாக்கல் செய்தனர். 

ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்ட முன்வடிவு, தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த சட்ட முன்வடிவு, மெட்ராஸ் பொருளாதார பள்ளி சட்ட முன்வடிவு, தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்த சட்டமுன் வடிவு, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு திருத்த சட்ட முன்வடிவு, கூட்டுறவு சங்கங்கள் 3ம் திருத்த சட்ட முன்வடிவு, நகராட்சி சட்டங்கள் 3ம் திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு நீக்கறவு செய்தல் 2ம் திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் திருத்த சட்ட முன்வடிவு, நீதிமன்ற கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டு திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு வழக்குறைஞர்களுடைய எழுத்தர்கள் நலநிதிய திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு பொது அறக்கட்டளைகள் சட்ட முன்வடிவு, அண்ணா பல்கலைக்கழக சட்ட முன்வடிவு, தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைபடுத்துதல் (முறைபடுத்துதல்) 2ம் சட்ட திருத்த முன்வடிவு, மதிப்பு கூட்டுவரி திருத்த சட்ட முன்வடிவு உள்பட 19 சட்ட முன்வடிவுகள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. 

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று 2020-2021ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து