பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் இருந்து ஒசாகா விலகல்

வெள்ளிக்கிழமை, 18 செப்டம்பர் 2020      விளையாட்டு
Osaka 2020 09 18

Source: provided

டோக்கியோ : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித்தொடரில் இருந்து பிரபல வீராங்கானை ஒசாகா விலகுவதாக அறிவித்துள்ளார்.

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியைச் சமீபத்தில் வென்ற ஜப்பான் வீராங்கனை ஒசாகா அடுத்து நடைபெறவுள்ள பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

மே 24-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை  நடைபெறுவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.இந்தத் தொடர் வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் பிரபல வீராங்கனை ஒசாகா, பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாகத் தன்னால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் விக்டோரியா அசரன்காவை வென்று  ஒசாகா பட்டம் வென்றார் . உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா சமீபத்தில் முதலிடத்தைப் பிடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து