எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், கேரள சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 20, 2026) தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. ஆனால் கவர்னர் உரையை வாசிக்கும் போது சில முக்கிய பகுதிகளை வேண்டுமென்றே தவிர்த்து விட்டதாக முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அரசு தயாரித்து கொடுத்த 72 மக்களைக் கொண்ட கொள்கை உரையில் 157 பத்திகள் இருந்தன. கவர்னர் உரையை வாசிக்கும் போது 12-வது பத்தியின் முதல் பகுதியை வாசிக்கவில்லை, 15-வது பத்தியின் கடைசி பகுதியை முடிக்கவில்லை என்றும், 16-வது பத்தியை இணைத்து வாசித்துள்ளார் என்றும் பினராயி விஜயன் சுட்டிக்காட்டியுள்ளார். மிக முக்கியமாக, மத்திய அரசு நிதி வழங்காதது, மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் மறுத்தது போன்ற மத்திய அரசுக்கு எதிரான விமர்சன பகுதிகளை கவர்னர் வேண்டுமென்றே தவிர்த்து விட்டதாக முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
“கவர்னர் உரை அரசின் கொள்கை அறிக்கை. அதை முழுமையாக வாசிக்காமல் தவிர்ப்பது அரசியல் நோக்கம் கொண்ட செயல்” என்று பினராயி விஜயன் கூறியுள்ளார். இது கேரளாவில் மட்டுமல்ல, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கவர்னர்கள் உரையை முழுமையாக வாசிக்காமல் தவிர்ப்பது அல்லது மாற்றி வாசிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், மாநில அரசுகள் – கவர்னர்கள் இடையேயான மோதல் மீண்டும் வெடித்துள்ளது. கேரள சட்டசபையில் நேற்று ஏற்பட்ட இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கவர்னர் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய – மாநில உறவுகளில் இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


