பார்த்திபன் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனின் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு மத்திய அரசு விருது

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      சினிமா
central-government 2020 10 21

Source: provided

புதுடெல்லி : தமிழில் கடந்த ஆண்டு இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படத்திற்கும், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஹவுஸ் ஓனர் படத்திற்கும், தற்போது மத்திய அரசின் விருதுகள் கிடைத்துள்ளது. 

இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்குவது வழக்கம். அந்த வகையில் 2019-ம் ஆண்டுகளான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இயக்குனர்கள், சிறந்த படங்கள், போன்ற பல்வேறு பட்டியல்கள் அடிப்படையில் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.

அனைத்து மொழியிலும் சிறந்த படங்களை தேர்வு செய்து இந்த விருதை கொடுத்து வருகிறது.  அந்த வகையில் தான் தற்போது கடந்த 2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் விருதுகளை பார்த்திபனின் ஒத்த செருப்பு, நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படங்கள் பெற்றுள்ளன.

மத்திய அரசின் விருதை பெற்றுள்ள இந்த இரு படங்களுமே, பாக்ஸ் ஆபிசில் தோல்வியை தழுவினாலும், தொடர்ந்து பல விருதுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குநரும்  நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு படைப்பு ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை  இயக்கியுள்ளார் பார்த்திபன்.

இப்படத்தைக் கண்ட அனைவரும் இந்திய சினிமாவில் இதுவரை எவரும் கையாளாத பெரும் முயற்சி இது என்று பலரும் பாராட்டினர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மத்திய அரசின் விருதுக்கு ஒத்த செருப்பு தேர்வாகியுள்ளது.

சென்னை மழை வெள்ளத்தின் வயதான தம்பதியினிடையே எதிர்பார்ப்பில்லா அளவில்லா அன்பு தான் ஹவுஸ் ஓனர் படத்தின் மொத்த கதை. சென்னையின் மழை நாட்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திருப்பார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து