முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித்பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமாக பரவி வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு பொதுமக்கள் முதல், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என அனைவரும் இலக்காகி வருகின்றனர்.  அந்த வகையில், மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு (வயது 61) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இத்தகவலை அஜித் பவார் வெளியிட்டுள்ளார்.

தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும், டாக்டர்கள் அறிவுறுத்தியதால் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாகவும் பவார் கூறி உள்ளார். 

புனே, சோலாப்பூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து விட்டு திரும்பிய பின்னர் அஜித் பவாருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இரண்டாவது முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

முன்னதாக, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து