முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழம்பெரும் வங்காள நடிகர் சவுமித்திர சாட்டர்ஜி காலமானார்: ஜனாதிபதி, பிரதமர், மம்தா இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 15 நவம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வங்காள நடிகர் சவுமித்திர சாட்டர்ஜி காலமானார்.

மூத்த வங்காள நடிகர் சவுமித்திர சாட்டர்ஜி (வயது 85) கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.   அத்துடன் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, நரம்பியல் பாதிப்பு என அடுத்தடுத்த பாதிப்புகளால் அவரது உடல்நிலை கடந்த சில தினங்களாக கவலைக்கிடமாகவே இருந்தது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நேற்று பிரிந்தது. 

பத்ம பூஷண், தாதாசாகேப் பால்கே விருது, சங்கீத நாடக அகாடமி விருது மற்றும் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர் சாட்டர்ஜி.  சாட்டர்ஜியின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   சர்வதேச, இந்திய மற்றும் வங்காள சினிமா இன்று ஒரு மிகப்பெரிய கலைஞனை இழந்துள்ளது. வங்காளத்திற்கு இது ஒரு சோகமான நாள். அரசு முழு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்படும் என மம்தா தெரிவித்துள்ளார்.

நடிப்பு கலைக்கு சாட்டர்ஜி மகத்தான பங்களிப்பை வழங்கியதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

சவுமித்திரா சாட்டர்ஜியின் மரணம் சினிமா உலகம், மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் கலாச்சார வாழ்க்கைக்கு பெரும் இழப்பு என்றும், சாட்டர்ஜி தனது படைப்புகள் மூலம், வங்காள மக்களின் உணர்வுகள் மற்றும் நெறிமுறைகளை வெளிப்படுத்தியவர் என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து