முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் கிரிக்கெட் டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைப்பு: ஐ.சி.சி. அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மும்பை: தென் ஆப்பிரிக்காவில் நடக்கவிருந்த மகளிர் கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில், 2022 -ம் ஆண்டின் இறுதியில் நடைபெற இருந்த மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகள் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும்.

2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் உட்பட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாகவே மகளிர் கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டதன் மூலம் வீராங்கனைகளுக்கு ஓய்வு கிடைக்கும். இதன் காரணமாக போட்டியில் பங்கு கொள்வதற்கு போதிய நேரம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் நடைபெற இருந்த முக்கியப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், காமன்வெல்த் போட்டிகள் உள்ளிட்ட முக்கியப் போட்டிகளின் காரணமாக மகளிர் கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து