முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச போட்டிகளில் விராட் கோலி 22 ஆயிரம் ரன் குவித்து சாதனை

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி : இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். நவீன கிரிக்கெட்டின் மகத்தான வீரரான அவர் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் 3 வடிவிலான ஆட்டங்களிலும் ரன்களை குவித்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடந்த ஒருநாள் போட்டியில் விராட் கோலி 87 பந்துகளில், 89 ரன்கள்(7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். 78-வது ரன்னை எடுத்தபோது அவர் சர்வதேச போட்டிகளில் 22 ஆயிரம் ரன் மைல் கல்லை தொட்டார். டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய மூன்றிலும் சேர்த்து 22 ஆயிரம் ரன்னை எடுத்துள்ளார். இந்த ரன்னை அவர் அதிவேகத்தில் எடுத்து சாதனை படைத்தார்.

விராட் கோலி ஒருநாள் போட்டியில் 11,977 ரன்களும், டெஸ்டில் 7,240 ரன்களும், 20 ஓவரில் 2,794 ரன்களும் எடுத்துள்ளார். 462 இன்னிங்சில் அவர் 22 ஆயிரத்து 11 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 56.15 ஆகும். அதிகபட்சமாக 254 ரன்கள் குவித்துள்ளார். 70 சதமும், 105 அரை சதமுமம் அடித்துள்ளார்.

ஒருநாள் போட்டியில் விராட் கோலி 12 ஆயிரம் ரன்களை எடுப்பதற்கு இன்னும் 23 ரன்களே தேவை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் இந்த சாதனையை படைப்பார என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச போட்டிகளில் 22 ஆயிரம் ரன்களை எடுத்த 8-வது வீரர் விராட் கோலி ஆவார். இந்திய வீரர்களில் தெண்டுல்கர், டிராவிட்டுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் போட்டி , 20 ஓவர்) 22,000 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள் வருமாறு:-

1. தெண்டுல்கர் (இந்தியா)- 34,357 ரன்கள் (782 இன்னிங்ஸ்).

2. சங்ககரா (இலங்கை) - 28,016 ரன்கள் (666).

3. பாண்டிங் (ஆஸ்திரேலியா) -27,483 ரன்கள் (668).

4. ஜெயவர்த்தனே (இலங்கை) -25,957 ரன்கள் (725).

5. ஜேக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) -25,534 ரன்கள் (617).

6. டிராவிட் (இந்தியா) -24,208 ரன்கள் (605).

7. லாரா (வெஸ்ட இண்டீஸ்)- 22,358 ரன்கள் (521).

8. விராட் கோலி (இந்தியா)- 22,011 ரன்கள் (462).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து