முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை தேர்தல்: சேலத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பிரச்சாரம் துவக்கம்: தேர்தல் களப்பணியாற்ற அ.தி.மு.க.வினர் உற்சாகம்

வெள்ளிக்கிழமை, 18 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளன.   இதனால் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  இந்தநிலையில் அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறது. முதல்வர்  எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது வழக்கம். அதன்படி இன்று காலை 9 மணிக்கு பெரிய சோரகை செல்லும் அவர்  அங்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த கரிய பெருமாள் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். 

இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானோர் பங்கேற்கிறார்கள். முன்னதாக அவர் தேர்தல் பிரசாரம் செய்யும் சிறப்பு வாகனம் அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  தொடர்ந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீரங்கனூர், இருப்பாளி, வேலநாயக்கன்பாளையம், ஆலச்சிபாளையம், எட்டி குட்டைமேடு ஆகிய இடங்களில் மினி கிளினிக்கை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் செல்லும் அவர் அங்கு ஒரு மினி கிளினிக்கை திறந்து வைக்கிறார்.  

தொடர்ந்து எடப்பாடியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வரும் அவர் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் தொடங்குவதையொட்டி தமிழக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் சேலம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்குவதையொட்டி தேர்தல் களப்பணியாற்ற அ.தி.மு.க. வினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். 

முன்னதாக சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய முதல்வர், மின் துறையை தனியார் மயமாக்கும் எந்த எண்ணமும் அரசிடம் இல்லை. விலை உயர்த்தப்பட்ட கேஸ் விலையை குறைக்க மத்திய அரசிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இன்னும் அதை எடுத்துக் கொள்ளவில்லை. நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு விட்டது. மத்திய அரசின் அதிகாரிகள் இன்னும் கையெழுத்திட்டு நிலத்தை பெற்றுக் கொள்ளவில்லை. 

சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று முதல் எடப்பாடி தொகுதியில் இருந்து தொடங்கவிருக்கிறேன். நாட்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தால் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன். சட்டப்பேரவை தேர்தலிலும் பா.ஜ.க. உடனான கூட்டணி தொடர்கிறது. குறிப்பிட்ட ஒரு நிறுவனங்களிம் தான் ஜி.பி.எஸ். கருவி வாங்க வேண்டும் என்ற சுற்றறிக்கை நிறுத்திவைக்கப்பட்டது. தரமான கருவி வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் குறிப்பிட்ட நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டன. ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவு தான் பின்பற்றப்படுகிறது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து