முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2025      ஆன்மிகம்
Meenakshi-1 2025-09-03

Source: provided

விருதுநகர் : விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.

விருதுநகரில் மிகவும் பழமை வாய்ந்த, மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி பெருந்திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சுவாமி மற்றும் அம்பாள் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் வீற்றிருந்த சுவாமி மற்றும் அம்பாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் சீனிவாசன் எம்எல்ஏ, நகர சபை தலைவர் மாதவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர், கோயிலில் இருந்து புறப்பட்டு மேல ரதவீதி, மெயின் பஜார், தெற்கு ரத வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. 6-ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து