Idhayam Matrimony

அதிபர் ட்ரம்ப் விருந்தில் புறக்கணிக்கப்பட்ட மஸ்க்

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2025      உலகம்
Trump 2025-09-05

Source: provided

வாஷிங்டன் : அதிபர் ட்ரம்ப் அளித்த விருந்தில் எலான் மஸ்க் புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் இரவு விருந்து வைத்து, பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் இதில் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. விருந்தில் பங்கேற்றவர்களிடம் செயற்கை நுண்ணறிவு மற்றும் அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்வீர்கள் என்பது குறித்து ட்ரம்ப் கேட்டறிந்தார்.

பின்னர் பேசிய அவர், அமெரிக்காவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி ஒரு வருடம் கழித்து தெரியும் என கூறினார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த ட்ரம்ப், உக்ரைன் போர் தொடர்பாக விரைவில் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து