Idhayam Matrimony

தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல்: மும்பையில் உச்சகட்ட கண்காணிப்பு

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2025      இந்தியா
Mumbai 2025-09-05

Source: provided

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக வந்த மிரட்டலை தொடர்ந்து, முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். மேலும் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை மாநகர போலீஸ் உதவி மையத்திற்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பில், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை நிரப்பிய 34 வாகனங்கள் மும்பையில் நுழைந்து விட்டதாகவும், அது வெடித்தால் மொத்த நகரமும் அழிந்து விடும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ்அப் நம்பருக்கும் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது.

மேலும், அந்த மிரட்டல் செய்தியில், லஷ்கர்-இ-ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் நுழைந்து இந்த தாக்குதலை நிகழ்த்த இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மும்பை போலீசார், மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த மிரட்டல் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து