நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: ஆர்.டி.ஓ. விசாரணை நிறைவு

வியாழக்கிழமை, 24 டிசம்பர் 2020      சினிமா
chitra 2020 12 24

டி.வி. நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

சின்னத்திரை நடிகையான சித்ரா, சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத்தை போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார்.   

இதுவரை சித்ராவின் தாய், தந்தை, மாமனார், மாமியார் உள்ளிட்டோரிடம் விசாரணையை முடித்துள்ளார். மேலும் சித்ராவுடன் நடித்த சக நடிகை சரண்யா மற்றும் அண்டை வீட்டார்களிடம் கோட்டாட்சியர் தனது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினார்.  இந்த நிலையில் நேற்று சித்ராவின் உதவியாளர் ஆனந்திடம் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார்.

மேலும் சித்ராவின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நிறைவு பெற்றுள்ளது. விசாரணை முடிந்த நிலையில், காவல் நிலையத்தில் அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கியது. இன்னும் மூன்று நாட்களில் ஆர்.டி.ஓ. விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து