Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 112 குறைந்தது

வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2021      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ. 112 குறைந்து, ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது.  கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4 ஆயிரத்து 380 ஆக இருந்தது. 

தங்கம் விலையில் கடந்த வாரம் ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் விலை அதிரடியாக குறைந்தது. பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.35 ஆயிரத்து 152-க்கு விற்பனையானது.  ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 394 ஆக இருந்தது.  

இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் நேற்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ.35 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4 ஆயிரத்து 380 ஆக இருந்தது.  தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் நேற்று  உயர்வு காணப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.74 ஆயிரத்து 300 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.30-க்கு விற்பனையானது.  தங்கம் விலை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புதிய உச்சத்தை தொட்டது. பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை குறைந்தபடியே இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத் தில் பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன்பின்னும் விலையில் ஏற்ற தாழ்வு இருந்து வந்தது. ஆனாலும் சமீபத்தில் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.  தற்போது விலை குறைந்த படி தங்கம் பவுன் ரூ.35 ஆயிரத்துக்குக் கீழ் வர வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து