முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

134 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை  2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை கலைஞர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

தமிழக அரசு சார்பில் 2019 மற்றும் 2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, சங்கீதா கிரிஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, இசை அமைப்பாளர்கள் டி.இமான், தினா,  பாடகர்கள் சுஜாதா, அனந்து, தயாரிப்பாளர்கள்  கலைப்புலி எஸ்.தாணு, ஐசரி கணேஷ், இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், லியாகத் அலிகான், மனோஜ் குமார், ரவிமரியா, டி.வி நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ், நித்யா, ஸ்டண்ட் இயக்குனர்கள் ஜாகுவார் தங்கம், தளபதி தினேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கலைஞர் கோமகன், பாடலாசிரியர்கள் காமகோடியன், காதல்மதி, வசனகர்த்தா வி.பிரபாகர், ஒளிப்பதிவாளர் ஆர்.ரகுநாத ரெட்டி, கதாசிரியர் தாமரை செந்தூர்பாண்டி ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.

நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, பின்னணி பாடகிகள் பி.சுசீலா, ஜமுனா ராணி ஆகியோருக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. சுகி சிவம், பாடகி வாணி ஜெயராம் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டது. வறுமையில் வாடும் மூத்த கலைமாமணி விருதாளர்கள் பிரிவில் நடிகை பசி சத்யா, நாடக நடிகை எஸ்.என்.பார்வதி உள்பட சிலருக்கு பொற்கிழி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கலைமாமணி விருது மற்றும் பொற்கிழி வழங்கும் விழா சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கடம்பூர் ராஜு, பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து