பொதுமக்கள் அனைவரும் அம்மாவின் அரசிற்கு முழுஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள்

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      தமிழகம்
Sellur-Raju 2020 12 12 - Copy

Source: provided

மதுரை : பொதுமக்கள் அனைவரும் அம்மாவின் அரசிற்கு முழுஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மேற்குதொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி,பழங்காநத்தம், மாடக்குளம், துரைச்சாமி நகர் ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பூமிபூஜை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

எந்த அரசும் கடன் வாங்காமல் எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. எல்லா அரசும் வளர்ச்சிப் பணிகளுக்கு கடன் பெற்றுத்தான் ஆக வேண்டும்.எதிர்க்கட்சி தலைவருக்கு இது பற்றி தெரியாதா என்று புரியவில்லை. ஒருகுறிப்பட்ட அளவிற்கு தான் கடன் வாங்க முடியும். 25 சதவீதத்திற்கு மேல் வாங்கமுடியாது. வரவு செலவு திட்டத்தில் அம்மா வைத்திருந்த தொகையை பற்றாக்குறையாக ஏற்படுத்தியது எதிர்க்கட்சி அரசாகும். தற்போது 2020 என்ற திட்டத்தின் அடிப்படையில் அம்மா இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடமாக மாற்றுவதற்கும்,  ஆசியாகண்டத்திலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதற்கு கட்டமைப்பு வசதிகளைஉருவாக்குவதற்கு இதுபோன்ற கடன்கள் பெறப்பட்டுள்ளது. அதை வைத்துத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் தற்போது கடன் பெற்று உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சொல்வது முழுவதும் தவறானது.

பொது மக்கள் பிரச்சனையை உடனுக்குடன் தீர்ப்பதற்கு வழி வகை செய்தவர் முதல்வர் எடப்பாடியார். யார் யாரெல்லாம் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று உள்ளார்கள் என்ற விபரத்தை கூட்டுறவு வங்கியில் கேட்டால் அறிக்கையாக வழங்கப்படும். கூட்டுறவு வங்கியி ஆப்பிலும் தெரிந்து கொள்ளலாம். அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 12 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர் விவசாயிகளுக்கு இடர்பட்ட காலங்களிலும் வறட்சி, புயல்,வெள்ளம் போன்றகாலங்களிலும் தள்ளுபடி வழங்கியது அம்மாவின் அரசு. இந்த ஆண்டு மட்டும் பயிர்க்கடன் ஏறத்தாழ ரூ.9,137 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி மூலம் 94 லட்சத்து 61 ஆயிரத்து 34 நபர்கள் பயிர்கடன் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 1.4.2020 முதல் 31.03.2021 வரை விவசாயிகளுக்குவழங்கிய கடன் 11 லட்சத்து 90 ஆயிரத்து 711 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 9 ஆயிரத்து 172 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சி பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது வெறும் ரூ.3,715 கோடிமட்டும் தான். மொத்தத்தில் கடந்த ஆட்சியில் தள்ளுபடி செய்தது ரூ.5,369 கோடிமட்டும் தான். இதுவும் டிராக்டர் மற்றும் லாரிகள் வாங்கியவர்கள்,நீண்டகால கடன்பெற்றவர்களுக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஓரே ஆண்டில் இரண்டு முறை சிறு,குறு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்தது 

அம்மாவின் அரசு. நமது முதல்வர் 16 லட்சத்து 40 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி மதிப்பீட்டில் தள்ளுபடி செய்து உள்ளார்கள். 2 ஏக்கர் மற்றும் 5 ஏக்கர் வைத்துள்ளவர்கள் எனஅளவீடு செய்து பட்டியல் சரிப்பார்த்த பிறகுதான் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடிசெய்வார்கள். அனைவருக்கும் தள்ளுபடி செய்ய முடியாது. விவசாயிகளுக்கு தானே புயல்,வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சம்பாதொகுப்பு, பயிர்க்காப்பீடு இழப்பீடு போன்ற வகையில் தமிழகம் முழுவதும் ரூ.1கோடியே 58 லட்சத்து விவசாயிகளுக்கு ரூ.32,470 கோடி மதிப்பீட்டில் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் ரூ.506 கோடி வழங்காமல் சென்றது எதிர்கட்சிகாரர்களின் அரசாகும். கூட்டுறவுத் துறையை பொறுத்தமட்டில் அரசியல்,கட்சி,சாதி, மதம் ஏதும் பாரபட்சம் இல்லை. தகுதியானவர்களுக்கு பயிர்க்கடன்வழங்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் மட்டும் பயிர்க்கடனாக விவசாயிகளுக்கு ரூ.440 கோடிதள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.பயிர்க்கடனை தள்ளுபடி செய்ததற்கு விவசாயிகளுக்கு ரசீது வழங்கியவர் வரலாற்றிலேயே ஒரே முதலமைச்சர் உழவர் மகன் நமது தமிழக முதல்வர் எடப்பாடியார் தான். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து விவசாயிகளும் பாராட்டி வருகிறார்கள்.

குடிமராமத்து பணிகள், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கியவர் நமது முதல்வர். இது உங்களுடைய அரசு,உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டஅரசு எனவே பொதுமக்கள் அனைவரும் என்றென்றும் அம்மாவின் அரசிற்கு முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து