சென்னை : சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த தி.மு.க., இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக எழுந்த போது, எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேச தி.மு.க. வாய்ப்பு கேட்டது. அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்த போது தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.