முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் தீவிர ஆலோசனை

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுஇடங்களில் முக கவசம் அணிவது தனிநபர் இடைவெளியை கட்டாயம் பின்பற்றுவது என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் ஏதேனும் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

இன்று மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ள நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் எனப் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது. தேர்தலுக்குப் பிறகு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவுவது வதந்தியே. கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்று சுகாதாரத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

மேலும் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், பொது இடங்களில் மக்களின் நடமாட்டத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கை மற்றும் அத்தியாவசியமற்றப் பணிகளுக்குத் தடை விதிப்பது போன்றவை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து