முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாதவராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதே போல் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் மாதவராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

அவரது இழப்பைத் தாங்கும் மனவலிமையை எல்லாம் வல்ல இறைவன் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும் வழங்கிடவும், அவரது ஆன்மா நற்கதியடையவும் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து