முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் திருப்பத்தூரில் 5 பேர் பலி? மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு

வியாழக்கிழமை, 6 மே 2021      இந்தியா
Image Unavailable

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நேற்று 5 பேர் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமில்லை. இறந்தவர்கள் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

திருப்பத்தூர் வட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு அதில் 220 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில், முகநூல், கட்செவி, தொலைக்காட்சிகளில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலைக்குள் கொரோனா தொற்று பாதித்த 5 நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுகுறித்து, செய்தியாளர்களிடம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் திலீபன் கூறியதாவது, 

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. 50 சிலிண்டர்கள் உள்பட 2 டேங்குகளில் ஆக்ஸிஜன் உள்ளது. இதன் அளவு சுமார் 250 ஆக்ஸிஜன் சிலிண்டர்களாகும். மேலும், இறந்ததாக குறிப்பிட்ட விஷமங்கலத்தை சேர்ந்த மாது (63) மூளை சம்பந்தமான பிரச்சனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு 8.20 மணிக்கு உயிரிழந்தார். அதே போல் ஆரிப் நகரைச் சேர்ந்த ஷேக்அலியின் மனைவி சைரா(38) புதன்கிழமை இரவு 8.50-க்கும், சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த சக்திகுமார்(40) இரவு 9.45க்கும், நாட்டறம்பள்ளி வட்டம், தகரகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர்(45) இரவு 10.55க்கும், திருப்பத்தூர் சின்ன மதார் தெருவைச் சேர்ந்த ஹக்கீம்(63) வியாழக்கிழமை அதிகாலை 3.20 மணிக்கும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு பல காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இவர்கள் யாருக்கும் கொரோனாத் தொற்று இல்லை.இவர்கள் இறப்பிற்கு அரசு மருத்துவமனை சிகிச்சை காரணமில்லை என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து