முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லட்சத்தீவு மக்களுக்கு எதிராக கொரோனா: மத்திய அரசை விமர்சித்த பெண் டைரக்டர் மீது தேசதுரோக வழக்கு

வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று கூறிய பெண் டைரக்டர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவும் ஒன்று. மொத்தம் 36 தீவுக்கூட்டங்களை லட்சத்தீவுகள் உள்ளடக்கியுள்ளது. இதில் 10 தீவுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். 11-வது தீவில் வணிக பயன்பாட்டிற்காக ஓட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவராக பிரபுல் ஹடா படேல் செயல்பட்டு வருகிறார். பிரபுல் ஹடா படேல் தலைமையிலான நிர்வாகம் லட்சத்தீவில் பல்வேறு சட்டத்திருத்தங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடைவிதிக்கவும், மது அருந்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், சட்டவிரோதமாக மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிசைகளை அப்புறப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட உள்ளது. 

நிர்வாகத்தின் சீர்திருத்தங்களுக்கு லட்சத்தீவு மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பிரபுல் ஹடா படேலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. 

 லட்சத்தீவு விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள பிரபல செய்தி தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவாதம் ஒன்று நடைபெற்றது. அந்த விவாத நிகழ்ச்சியில் லட்சத்தீவுகளில் ஒன்றான ஷட்லட் தீவை சேர்ந்த சேர்ந்த பிரபல பெண் டைரக்டரும், நடிகையும், சமூகசெயற்பாட்டாளருமான ஆஷா சுல்தானா பங்கேற்றார்.

கேரளாவில் வசித்து வரும் ஆஷா சுல்தானா விவாதத்தின்போது, கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக (Bio Weapon) மத்திய அரசு பயன்படுத்துகிறது.  பிரபுல் ஹடா படேலை மத்திய அரசு உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது என கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரையடுத்து வெறுப்புணர்வை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கேரளாவிலும் ஆஷா சுல்தானா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆஷா சுல்தானா விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து