முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.வீரர்கள் ஏமாற்றம்

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
21-Ram-58

Source: provided

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 3-வது இடத்திலும், இந்திய நட்சத்திர வீரர் விராட்கோலி 4-வது இடத்திலும் இருக்கிறார்கள். மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 8-வது இடத்தில் உள்ளார்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் இரு இடம் முன்னேறி மீண்டும் ‘நம்பர் 1’ அரியணையில் அமர்ந்துள்ளார். இதனால் இலங்கையின் தீக்‌ஷனா 2-வது இடத்துக்கும், 2-ல் இருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3-வது இடத்துக்கும் சரிந்தனர். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ஜிம்பாப்பேயின் சிகந்தர் ராசா டாப்-3 இடங்களில் மாற்றமின்றி தொடருகிறார்கள். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.

நேபாளத்தை பந்தாடிய இந்திய அணி

7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 4 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை எதிர்கொண்டது. இதில் கோல் மழை பொழிந்த இந்தியா 7-0 என்ற கணக்கில் நேபாளத்தை பந்தாடி அபார வெற்றி பெற்றது. அபிஸ்தா பாஸ்நெட், நீரா சானு லாங்ஜாம், அனுஷ்கா குமாரி தலா 2 கோலும், ஜூலன் ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.

சர்ச்சையில் சிக்கிய பந்துவீச்சாளர்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரெனெலன் சுப்ராயன் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார்.

இந்த நிலையில் அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக கள நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். பந்துவீசும் போது முழங்கை 15 டிகிரி கோணத்துக்கு மேல் வளையக்கூடாது. ஆனால் அவரது பவுலிங் அதை மீறும் வகையில் உள்ளது. 31 வயதான சுப்ராயன் அடுத்த 14 நாட்களுக்குள் தனது பந்துவீச்சு முறையை சரி செய்து சோதனைக்குட்படுத்த வேண்டும். இதன் முடிவு வரும் வரை அவர் தொடர்ந்து பந்து வீசலாம். ஆனால் சோதனையில் தேர்ச்சி பெற தவறினால் பந்துவீச செய்ய இடைக்கால தடை விதிக்கப்படும். ஏற்கனவே அவர் இரு முறை இதே போன்ற சர்ச்சையில் சிக்கி இருப்பது நினைவு கூரத்தக்கது.

இந்திய வீரர் தங்கம் வென்றார்

16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்களுக்கான ஸ்கீட் பந்தயத்தின் இறுதி சுற்று நேற்று முன்தினம் நடந்தது. தகுதி சுற்றில் 2-வது இடம் பிடித்த இந்திய வீரர் அனந்த்ஜீத் சிங் நருகா 57-56 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் ஆசிய விளையாட்டு சாம்பியனான அல் ரஷிதியை (குவைத்) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இது அனந்த்ஜீத் சிங் ஆசிய சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் வென்ற முதல் தங்கமாகும்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி- சுருச்சி சிங் ஜோடி 17-9 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேவின் லியு ஹெங் யு- ஹிசை ஹிசியாங் சென் ஜோடியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து