Idhayam Matrimony

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலை தள்ளுபடி செய்து ரஷ்ய அறிவிப்பு

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2025      உலகம்
Oil

Source: provided

மாஸ்கோ: அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால், ரஷ்யாவிலிருந்து தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிப்புடன், மொத்தம் 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா நேற்று முன்தினம் கூறியதாவது: அமெரிக்காவிடமிருந்து ஏராளமான அழுத்தங்கள் மற்றும் தடைகள் உள்ள போதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும். தள்ளுபடிகளைப் பொறுத்தவரை அது ஒரு வணிக ரகசியம். எனினும், பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டு தள்ளுபடியின் அளவு 5 சதவீதமாக இருக்கும். இவ்வாறு எவ்ஜெனி கிரிவா தெரிவித்தார்.

ரஷ்ய துணைத் தூதரக தலைவர் ரோமன் பாபுஷ்கின் கூறும் போது, “இந்தியா சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், எங்களது உறவில் நம்பிக்கை உள்ளது. வெளிப்புற அழுத்தங்கள் இருந்தபோதிலும் இந்தியா-ரஷ்யா இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து