முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: அர்ஜென்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியா தகுதி

வியாழக்கிழமை, 29 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இந்திய அணிக்காக வருண்குமார் 43-வது நிமிடத்திலும், விவேக் சாகர் பிரசாத், 58-வது நிமிடத்திலும், ஹர்மன் பிளீசிங் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

'ஏ' பிரிவில் இடம்... 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.8 முறை சாம்பியனான இந்திய அணி ஏ”பிரிவில் இடம் பெற்றுள்ளது. கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் பெற்ற அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் ஜப்பான், நியூசிலாந்து, ஸ்பெயின் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

'பி' பிரிவில் பெல்ஜியம்...

“பி” பிரிவில் கடந்த முறை வெள்ளிப் பதக்கம் பெற்ற பெல்ஜியம், வெண்கலப் பதக்கம் வென்ற ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் 2 பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

நியூசி. - ஸ்பெயினை...

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 1-7 என்ற கோல் கணக்கில் மோசமாக தோற்றது. 3-வது ஆட்டத்தில் ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

இந்தியா அபார வெற்றி... 

இந்திய அணி 4-வது ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் அர்ஜென்டினாவை நேற்று எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக வருண்குமார் 43-வது நிமிடத்திலும், விவேக் சாகர் பிரசாத், 58-வது நிமிடத்திலும், ஹர்மன் பிளீசிங் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முதல் பகுதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை. ஆட்டத்தின் கடைசி 2 நிமிடங்களில் இந்தியா 2- கோல் அடித்து முத்திரை பதித்தது.

3-வது வெற்றி...

அர்ஜென்டினா அணிக்காக கேசிலா 48-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த பதில் கோலால் 1-1 என்ற சமநிலை நீண்ட நேரமாக இருந்தது.கடைசி நிமிட கோல்களால்தான் வெற்றி கிடைத்தது. இந்திய அணி பெற்ற 3-வது வெற்றியாகும். இதன் மூலம் கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 4 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா... 

இந்த பிரிவில் ஆஸ்திரேலியாவும் 4 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பானை இன்று எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து