முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல்கள் தொடர்ந்து இலவசம்

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2025      இந்தியா
Books 2025-03-19

Source: provided

புதுடெல்லி : வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல்கள் தொடர்ந்து இலவசம் என்று அறிவிப்பு.

இந்து தமிழ் திசை’ நாளேட்​டில் செய்தி வெளி​யானதை தொடர்ந்து வெளி​மாநில தமிழ்ச் சங்க பள்​ளி​களுக்கு பாடநூல்​களை தொடர்ந்து இலவச​மாக அளிக்க தமிழக அரசு அரசாணை வெளி​யிட்டுள்​ளது. நாட்​டின் பிற மாநிலங்​களின் முக்​கிய நகரங்​களில் தமிழ்ச் சங்​கங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

இந்த சங்​கங்​களாலும் தமிழ் கல்வி அமைப்​பு​களாலும் நடத்​தப்​படும் பள்​ளி​களில் தமிழ்​வழிக் கல்வி மற்​றும் தமிழ் பாடப்​பிரிவுக்கு நூல்​கள் தேவைப்​படு​கின்​றன. இவை நீண்ட வருடங்​களாக தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வி​யியல் பணி​கள் கழகத்​தின் சார்​பில் இலவச​மாக வழங்​கப்​பட்டு வந்​தன.

இந்த இலவச விநி​யோகத்தை நடப்பு வருடம் முதல் தமிழ்​நாடு அரசு ரத்து செய்​திருந்​தது. இது தொடர்​பான செய்தி கடந்த 11-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டில் வெளி​யானது. இலவச விநி​யோகம் ரத்து செய்​யப்​பட்​டதற்கு பரவலாக கண்​டனம் எழுந்​தது. இதன் தாக்​க​மாக, தற்​போது தமிழ்​நாடு அரசு தனது முடிவை மாற்றி இலவசப் பாடநூல் விநி​யோகத்தை தொடர முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் டெல்​லி​யின் தமிழ்​நாடு அரசு இல்ல அதி​காரி​கள் வட்​டாரம் கூறும்​போது, “நி​திப் பற்றக்​குறை காரண​மாக தமிழ்​நாடு பாடநூல் இலவச விநி​யோகம் ரத்து செய்​யப்​பட்​டிருந்​தது. இது தொடர்​பான செய்தி இந்து தமிழ் திசை நாளேட்​டில் வெளி​யாகி முதல்​வர் ஸ்டா​லின் கவனத்​தைப் பெற்​றது. இதனால், உடனடி​யாக ரத்து உத்​தரவை மாற்றி மீண்​டும் பாடநூல்​கள் இலவச​மாக வழங்க முதல்​வர் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதற்​கான அரசாணையை தமிழ்​நாடு அரசு ஆகஸ்ட் 18-ம் தேதி பிறப்​பித்​துள்​ளது. இது தொடர்​பான தகவல் அனைத்து தமிழ்ச் சங்​கங்​களுக்​கும் கடிதம் மற்​றும் மின்​னஞ்​சல் மூலம் அனுப்​பப்​பட்டு வரு​கிறது” என்று தெரி​வித்​தனர். இந்த நூல்​களை, தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வியல் பணி​கள் கழகத்​தின் சென்னை வட்​டார அலு​வல​கம் மற்​றும் அடை​யாறு கிடங்​கில் பெற்​றுக் கொள்​ளு​மாறும் தகவல் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த நூல்​களை பிற மாநிலங்​களுக்கு எடுத்​துச் செல்​வதற்​கான செலவு சுமார் ரூ.1 லட்​சம் வரை ஆகிறது. இதை​யும் தமிழ்​நாடு அரசே தனது செல​வில் அனுப்பி வைத்​தால் நல்​லது என்ற கோரிக்​கை​யும் வெளி​மாநில சங்​கங்​கள் தரப்​பில் உள்​ளது. வெளி மாநிலங்​களுக்​கான இந்த பாடநூல்​களின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து