முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய திட்டப் பணிகள்- முதல்வர் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2025      தமிழகம்
CM-2-2025-08-15

Source: provided

சென்னை : இநது சமய அறநிலையததுறை சார்பில் புதிய திட்ட பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

சென்னை புரசைவாக்கம், கங்காதரேசுவரர் கோவிலில் 3.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் மற்றும் அர்ச்சகர்கள் குடியிருப்பு கட்டும் பணி; ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோவிலில் 2.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சித்த மருத்துவக் கல்லூரி சுற்றுச்சுவர் கட்டும் பணி; சென்னை மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவிலில் 1.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டும் பணி, திருவண்ணாமலை மாவட்டம், அ.கோ.படைவீடு, ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயிலில் 1.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி என மொத்தம் 124 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 17 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

காணொலிக் காட்சி வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தக்கார் அருள்முருகன், திருச்செந்தூர் நகரசபை தலைவர் சிவ ஆனந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சி.என். அண்ணா துரை எம்.பி., மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களான திருநெல்வேலி மாவட்டம். களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவில் 8.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், விழுப்புரம் மாவட்டம், பெருமுக்கல், காமாட்சியம்மன் கோவில் 7.63 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான், கைலாசநாதசுவாமி கோவில் 4.16 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத சுவாமி கோவில் 2.96 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாவட்டம், திருமோகூர், காளமேகப்பெருமாள் கோவிலுக்கு 2.81 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், விருதுநகர் மாவட்டம், கல்விமடை திருநாகேஸ்வர முடையார் கோவில் 2.10 கோடி ரூபாய் மதிப்பீட்டி லும், திருவண்ணாமலை மாவட்டம், புதுக்காமூர் புத்திரகாமேஸ்வரர் கோவில் 1.56 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம், ஐராதீஸ்வரர் மற்றும் அழகேஸ்வரர் கோவில் 1.31 கோடி ரூபாய் மதிப்பீட்டி லும், மதுரை மாவட்டம், சோழவந்தான், ஜெனகை நாராயணப்பெருமாள் கோவில் 1.52 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 32.53 கோடி மதிப்பீட்டில் 9 கோவில்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றைய தினம் தொடங்கி வைத்தார்.

சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் 2.27 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு, மயிலாப்பூர், திருவள்ளூவர் கோவிலில் 2.05 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு என மொத்தம் 51.19 கோடி ரூபாய் செலவிலான 14 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து