Idhayam Matrimony

சிங்கம்பட்டி ஜமீன் குறித்து வழக்கு இயக்குநர் பாலா விடுவிப்பு

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை: அவன் – இவன் படம் தொடர்பான வழக்கிலிருந்து இயக்குனர் பாலா விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் – இவன். படத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில், சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாக சித்தரித்ததாக இயக்குனர் பாலா மற்றும் ஆர்யா மீது வழக்கு தொடரப்பட்டது. சிங்கம்பட்டி சமஸ்தானத்தைச் சேர்ந்த சங்கராத் மஜன் தரப்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். விசாரணை முடிந்து தீர்ப்பு நேற்று முன் தினம் வெளியாக இருந்த நிலையில் இயக்குனர் பாலா ஆஜராகவில்லை. இதனால் நேற்று பாலா கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, தீர்ப்பும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பாலா நேற்று ஆஜரானார். அப்போது, மனுதாரர் குற்றச்சாட்டை முறையாக நிரூபணம் செய்யாத காரணத்தால் இயக்குனர் பாலாவை வழக்கில் இருந்து விடுவித்து நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், சிங்கம்பட்டி இளையஜமீன் சங்கராத் மஜனிடம் ஆலோசனை பெற்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக இயக்குனர் பாலா மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து