எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டோக்கியோ : 160 நாடுகளில் இருந்து 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டோக்கியோ 'பாராலிம்பிக்' போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று கோலாகலமாக தொடங்குகின்றன. துவக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் செல்கிறார்.
4,400 வீரர்கள்...
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று கோலாகலமாக தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஏறக்குறைய 160 நாடுகளைச் சேர்ந்த 4, 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். கொரோனா தொற்று காரணமாக பாராஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவுள்ள டோக்கியோ பாராஒலிம்பிக் துவக்க விழாவில் மாரியப்பன் உட்பட 5 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார்.
பாராலிம்பிக் போட்டி...
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். கடந்த 1948 ஒலிம்பிக் போட்டியில் அதிகளவு மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். அதற்கு அடுத்து 1960-ல் 23 நாடுகளில் இருந்து 400-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கோனர் பங்கேற்றனர்.
ஓராண்டு தள்ளி...
ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உடல்பாதிப்புக்கு ஏற்ப அவர்கள் விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டே பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே பாராலிம்பிக் போட்டியும் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. டோக்கியோவில் ஏற்கெனவே 1964-ல் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. புதிதாக தற்போது பாட்மிண்டன், டேக்வாண்டோ போன்ற விளையாட்டு போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ரசிகர்கள் இன்றி...
கொரோனா பரவல் அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளின் சார்பில் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கையில் வரம்பு கிடையாது.
540 போட்டிகள்...
வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், 5 பேர் கால்பந்து, கோல்பால், ஜூடோ, பாராகனோ, பவர்லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல், சிட்டிங் வாலிபால், நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து, வாள்சண்டை, ரக்பி, டென்னிஸ் உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடக்க உள்ளன.
54 வீரர்கள்...
இந்தியா சார்பில் அதிகபட்ச எண்ணிக்கையாக இந்த முறை 54 வீரர், வீராங்கனைகள் தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்பட 9 வகையான விளையாட்டுகளில் களம் இறங்குகிறார்கள். தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கில் 2 தங்கம், தலா 1 வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை இந்திய அணியினர் வென்றிருந்தனர். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெல்லும் பதக்கங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் எனக் கருதப்படுகிறது.
மாரியப்பன் தங்கவேலு...
கடந்த 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தேவேந்திரா ஜஹாரியாவும், உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றனர். தற்போது இந்திய அணியில் உலக சாதனையாளர்கள் சந்தீப் சௌதரி, சுமித் ஆகியோர் தடகள அணியில் உள்ளனர். பாட்மிண்டனில் 4 முறை உலக சாம்பியன் பிரமோத் பகத், சுஹாஸ் யதிராஜ் ஆகியோர் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளது.
துப்பாக்கி சுடுதல்...
டேக்வாண்டோ மகளிர் பிரிவில் உலகப் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை அருணா தன்வர் டோக்கியோவில் பதக்கம் வெல்லவார் என நம்பப்படுகிறது. துப்பாக்கி சுடுதலில் 2021 உலகப் போட்டியில் தங்கம் வென்ற ரூபினா பிரான்ஸிஸ் பதக்கம் பட்டியலில் இடம்பெறுவார் என தெரிகிறது. மேலும் எப்-46 ஈட்டி எறிதலில் ரஞ்சித் பாட்டி, சந்தீப் சஞ்சய் சர்க்கார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
குண்டு எறிதல்...
உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு, சரத்குமார், வருண் சிங்கும், டி-47 உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார், ராம்பால், டி-64-ல் பிரவீண்குமார், எப்-51 கிளப் த்ரோவில் அமீத்குமார், தரம்பீர், எப்-57 குண்டு எறிதலில் சோனம் ராணா, எப் 35-இல் அரவிந்த், எப்-56 வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா, எப்-56-இல் வினோத்குமார் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
வில்வித்தை...
மகளிர் பிரிவில் எப்-51 கிளப் த்ரோவில் ஏக்தா பயன், கஷிஷ் லக்ரா, டி13 100 மீட்டரில் சிம்ரன், எப்-34 குண்டு எறிதலில் பாக்யஸ்ரீ ஜாதவ் இடம் பெறுகின்றனர். வில்வித்தையில் ஹர்விந்தர் சிங், விவேக் சிகாரா, ராகேஷ் குமார், ஷியாம் சுந்தர் ஆடவர் பிரிவிலும், ஜோதி பாலியான் மகளிர் பிரிவிலும் கலந்து கொள்கின்றனர்.
பாட்மிண்டன்...
பாட்மிண்டன் ஆடவர் பிரிவில் பிரமோத் பகத், மனோஜ் சர்க்கார், தருண் தில்லான், சுஹாஸ் யதிராஜ், கிருஷ்ணாவும், மகளிர் பிரிவில் பால் பார்மர், பலாக் கோலி (இரட்டையர்) பங்கேற்கின்றனர். முதன் முதலாக இந்தியா சார்பில் பாரா கனோயிங்கில் பிரச்சி யாதவ் பங்கேற்கிறார்.
பவர் லிஃப்டிங்...
பவர் லிஃப்டிங்கில் மகளிர் பிரிவில் சகீனா கதுன், ஆடவர் பிரிவில் ஜெய்தீப் தேஸ்வால் பவர் லிஃப்டிங்கில் பங்கேற்கின்றனர். துப்பாக்கிச் சுடுதலில் ஆகாஷ், மணிஷ் நர்வால், தீபிந்தர் சிங், ராகுல் ஜாக்கர், சிங்ராஜ், சித்தார்த்த பாபு, ஸ்வரூப் உஹால்கர், தீபக் சைனி ஆடவர் பிரிவிலும், ரூபினா பிரான்ஸிஸ், அவனி லேக்ரா மகளிர் பிரிவிலும் கலந்து கொள்கின்றனர்.
டேபிள் டென்னிஸ்...
நீச்சல் ஆடவர் பிரிவில் நிரஞ்சன் முகுந்தன், சுயாஷ் ஜாதவ் கலந்து கொள்கின்றனர். டேபிள் டென்னிஸ், மகளிர் பிரிவில் சோனல்பென் பட்டேல், பவீனா பட்டேல் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
கொரோனா தொற்று...
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு ஜப்பானில் நாளுக்கு நாள் எகிறி வருவது போட்டி அமைப்பாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதில் டோக்கியோவில் மட்டும் 5,074 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். பாராஒலிம்பிக் தொடர்புடையவர்கள் இதுவரை 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடும் கட்டுப்பாடு...
இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக போட்டி அமைப்பு குழுவின் தலைமை செயல் அதிகாரி டோஷிரோ முட்டோ தெரிவித்துள்ளார். பாராஒலிம்பிக் கிராமத்தில் உள்ள பணியாளர்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இனி வீரர், வீராங்கனைகளை போல் அவர்களுக்கும் தினந்தோறும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் அங்கு அனைவரும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு...
இதற்கிடையே ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாராஒலிம்பிக் போட்டியை பார்க்க ஸ்டேடியங்களுக்கு 10 ஆயிரம் பள்ளி மாணவர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
-
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்
31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து
31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து
31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது.
-
ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி
31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-10-2025.
31 Oct 2025 -
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு
31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
-
தமிழகத்தில் பீகார் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை : வி.சி.க. தலைவர் திருமாவளவன்
31 Oct 2025சென்னை : பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருமாவளவன் கூறினார்.
-
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: அமலாக்கத்துறையின் புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
31 Oct 2025திருச்சி : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமலாக்கத்துறை புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்: கார்கே
31 Oct 2025புதுடெல்லி : ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
31 Oct 2025கூடலூர் ,: நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
வெறுப்புவாத அரசியல் செய்கிறது: பா.ஜ.க. மீது கனிமொழி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : வெறுப்புவாத அரசியல் செய்வது பா.ஜ.க.வின் வாடிக்கை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.


