தங்கம் விலை பவுனுக்கு ரூ.216 உயர்வு

Gold-raye-2021-08-07

Source: provided

சென்னை : சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 216 உயர்ந்து ரூ. 35,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

நாட்டில் கொரோனா பாதிப்புகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருவாய் இழப்பு ஆகியவற்றால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டபோதிலும், நகைகள் வாங்குவதில் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,461 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.ரூ.35,688-க்கும் நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்டது.  நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 32 குறைந்திருந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்தது.

இதன்படி, சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ரூ.4,485-க்கு விற்பனையானது. பவுன் ஒன்றுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்பட்டது.  இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38 ஆயிரத்து 792-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து