முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவநாகுவின் மதுரை சங்கம்

சனிக்கிழமை, 4 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

உண்மை சம்பவத்தை கருவாக வைத்து உருவான படமே இந்த மதுரை சிங்கம்.

ஒரு குறிப்பிட்ட  பகுதியில் வகுப்புவாதம் தலைதூக்குகிறது. இதன் காரணமாக நல்ல நண்பர்கள் எதிரிகளாகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சில வன்முறையாளர்கள் அப்பகுதியைச் சேர்ந்த  மாணவர்களை மிரட்டி பணம் பறிப்பதும் தவறான செயல்களுக்காகவும் அரசியல் லாபங்களுக்காகவும் அவர்களை பயன்படுத்துகின்றனர். இதை எதிர்க்கிறான் கதையின் நாயகன். வன்முறையாளர்களை அடித்து துவம்சம் செய்கிறான். மாணவர்களை ஒருங்கிணைக்கிறான். இறுதியில் பல முடிச்சுகளை அவிழ்க்கிறது இப்படம்.

தேவி நேனி எனும் பெயரில் ஆந்திராவில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இது. என்.டி.ஆரின் பேரன் தாரக் அடிதடி ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க நவீனா கதாநாயகியாக நடித்திருக்கின்றனர். அர்ஜூன் தேஜா, சுரேஷ், அன்னபூர்ணா, தனிஷ்கா, கோட்டி ஆகியோர் இப்படத்தில்  நடித்துள்ளனர்.

எவரெஸ்ட் எண்டர் டெய்ன்ட்மென்ட் சார்பாக ஆப்பிள் மூவி மீடியாஸ் இப்படத்தை  தமிழில் உருவாக்கியுள்ளது. வசனம் - ஏ.ஆர்,கே.ராஜராஜா, பாடல்கள்

ஆவடி சே.வரலட்சுமி, சங்கர் நீதி மாணிக்கம், செம்மங்குடி துரையரசன், இசை - கோட்டி, ஒளிப்பதிவு -D.G.குமார், தயாரிப்பு-DR. திவ்யா சுந்தரவடிவேலு, கதை திரைக்கதை இயக்கம் - நர்ரா சிவநாகு, பி.ஆர்.ஓ.வெங்கட்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து