அக்டோபர் இறுதிக்குள் தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தப்படும் தலைமை செயலாளர் இறையன்பு தகவல்

I-aiya-pu 2021 09 12

Source: provided

சென்னை: அக்டோபர் மாத இறுதிக்குள் தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தப்படும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் நேற்று மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, 

தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்கிற காரணத்தால் பெரிய அளவிலான தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.  அக்டோபர் மாத இறுதிக்குள் தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தப்பட்டு, அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  பொதுமக்களின் வருகையை பொறுத்து வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும். மேலும் தமிழகத்தில் அக்டோபர் மாத இறுதிக்குள் தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து