டி.வி நிகழ்ச்சியில் நீரஜ்

Niraj---Srijesh 2021 09 14

சோனி தொலைக்காட்சியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் 13-ம் பருவம் கடந்த மாதம் ஆரம்பித்தது. கோன் பனேகா குரோர்பதி 13 நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் மீண்டும் தொகுத்து வழங்குகிறார். 

இந்நிலையில் செப்டம்பர் 17 அன்று சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ஷான்தார் சுக்ரவார் என்கிற பகுதியில் பிரபல விளையாட்டு வீரர்களான நீரஜ் சோப்ராவும், ஸ்ரீஜேஷூம் கலந்து கொள்கிறார்கள். கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்கும் நீரஜ் சோப்ராவும் ஸ்ரீஜேஷும் அமிதாப் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதோடு தங்களுடைய டோக்கியோ ஒலிம்பிக்ஸ் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள். 

இந்திய அணி பயிற்சி

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட உள்ளது.  முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 21-ம் தேதி தொடங்க உள்ளது.  இந்நிலையில், ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தனிமைப்படுத்துதலை முடித்து தற்போது தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் பயிற்சியை மேற்கொள்ளும் புகைப்படங்களை பி.சி.சி.ஐ. தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கதறிய ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியின் போது, முன்னணி வீரர் ஜோகோவிச் அழுத வீடியோ வெளியாகி டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேலண்டர் ஸ்லாம் கனவுடன் இறுதிப் போட்டியில் களம் இறங்கிய செர்பியாவின் ஜோகோவிச், ரஷ்ய வீரர் மெட்வடேவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். தோல்வியின் விளிம்பில் இருந்த அவர், மைதானத்திலேயே அழுத வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக விரக்தியில் ஜோகோவிச், தனது டென்னிஸ் மட்டையை தரையில் அடைத்து உடைத்தார்.

ஜிம்பாப்வே தோல்வி

ஜிம்பாப்வே-அயர்லாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடந்தது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே 34 ஓவரில் 134 ரன்னில் சுருண்டது. டக்வொர்த் விதிப்படி அயர்லாந்துக்கு 32 ஓவரில் 118 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 22.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இதன்மூலம் 3 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. 2-வது போட்டி முடிவில்லை. இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரை அயர்லாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து