முக்கிய செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் இடம் தேர்வுக்கு தடை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நிலம் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டதை அடுத்து கலெக்டர் அலுவலகம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. அது கோவிலுக்கு சொந்தமான இடமாகும். குத்தகை அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்துக்கு அந்த இடத்தை ஒதுக்கினார்கள். இதற்கான உத்தரவை கலெக்டர் பிறப்பித்து இருந்தார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் கலெக்டர் உத்தரவை ஏற்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கலெக்டர் அலுவலகத்துக்கு நிலம் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் கூறினார்கள். இதனால் கலெக்டர் அலுவலகம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து