பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

Sonu-Suite 2021 09 18

Source: provided

மும்பை : நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்  நடிகர் சோனு சூட்  கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அதன் மூலம் பலராலும் பாராட்டுக்களைப் பெற்று உள்ளார்.  பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மூலமாக நடிகர் சோனு சூட் அரசியலில் இறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள அவருக்கு சொந்தமான ஆறு இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.  இந்த சோதனையில் பாலிவுட் திரைப்படங்கள் மூலமாக சோனு சூட் சொந்த நிதி நிறுவனம் மூலம் வந்த பணம் மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  எனவே, வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்கள் நீடித்த சோதனை குறித்து வருமானவரித்துறை தகவல் அளித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ரூ.2 கோடி நன்கொடை பெற்றதில் விதிமீறல் நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்பட்ட அவரது இலாப நோக்கற்ற  தொண்டு அறக்கட்டளை ரூ.18 கோடிக்கு மேல் நன்கொடை சேகரித்து உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் வரை, அதில் ரூ.1.9 கோடி நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது . மீதி ரூ. 17 கோடி லாப நோக்கற்ற வங்கிக் கணக்கில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து