Idhayam Matrimony

பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2025      அரசியல்
Vijay-2025-09-20

நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கி விட்டன. அதன்படி, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், த.வெ.க., நாம் தமிழர், பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டன.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை கடந்த 13-ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கியுள்ளார். அவர் டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் நேற்று நாகை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே நடந்த பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது,

மக்களை, நமது சொந்தங்களை சந்திக்க எத்தனை கட்டுப்பாடுகள். பிரசாரம் மேற்கொள்ள அங்கு அனுமதியில்லை, இங்கு அனுமதியில்லை என்று கூறுகின்றனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களை கேட்டால் மிகவும் சிறிய காரணங்களாக இருக்கும். 5 நிமிடம் தான் பேசவேண்டும், 10 நிமிடம்தான் பேசவேண்டும் என்று கூறின்றனர். நான் பேசுவதே 3 நிமிடம்தான். அதிலும் நான் அதை பேசக்கூடாது, இதை பேசக்கூடாது என்றால் நான் எதைத்தான் பேசுவது.

அரியலூருக்கு நான் பிரசாரத்திற்கு சென்றபோது அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருச்சியில் நான் பேசத்தொடங்கியதும் ஸ்பீக்கருக்கு செல்லும் ஓயர் துண்டிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவரோ, பிரதமர் மோடியோ, உள்துறை மந்திரியோ இங்கு வருகிறார் என்றால் இதுபோன்று கட்டுப்பாடுகள் போடுவீர்களா? மின்தடை செய்வீர்களா? இதுபோன்று ஓயரை துண்டிப்பீர்களா? முதல்-அமைச்சர் சார்? கொஞ்சம் துண்டித்துதான் பாருங்களேன்... முடியாது அல்லவா? பேஸ்மெண்ட் அதிரும் அல்லவா? நீங்கள்தான் மறைமுக உறவுக்காரர்கள்தானே இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து