முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2025      தமிழகம்
Anbil 2

Source: provided

திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளி, கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆர்.டி.இ. நிதி அதிக பங்கீடு மாநில அரசுதான் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். 60:40 என்ற விகிதாசாரம் இருக்கும்போது மாநில அரசு எப்படி முழுமையாக நிதி கொடுக்க முடியும்? அவர் சொல்வது அரைகுறையாக கொடுத்து நிறுத்துங்கள் என்பது போல உள்ளது. ஆர்.டி.இ. ஆக்ட் என்பது உச்சநீதிமன்றத்தால் கொண்டு வரப்பட்டு மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் படிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது. 

இதில் யாரும் தலையிட முடியாது. ஒரு அரசாங்கம் வருடம் தோறும் அதற்கான நிதியை மட்டுமே வெளியிட வேண்டும். ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றம் சொல்வதையே கேட்காமல் உள்ளது. மாணவர்களின் நலன் கருதி உடனடியாக அந்த பணத்தை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். ஒரு வருடத்தில் 1 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்று வருகின்றனர். மத்திய அரசின் செயல்பாடுகளால் அந்த இணையதளத்தையே திறக்க முடியாத நிலை உள்ளது.

இந்தியாவில் எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டதை தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவிக்கிறார். தமிழ்நாடு தனித்தன்மையான மாநிலம். இங்கு இரு மொழிக் கொள்கை போதுமானது. அண்ணா அந்த காலத்தில் இருந்தே கூறி வருகிறார். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை வைத்து நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். மத்திய அரசு சொல்வதைப் போல 3 மொழிகள் மட்டுமின்றி 22 ெமாழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என நாங்களும் கூறுகிறோம். ஆனால் அதில் கட்டாயம் இருக்கக்கூடாது. விருப்பத்தின் அடிப்படையில் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று விட்டு 3-வது மொழியில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க கூறுவது எந்தவிதத்தில் நியாயம்.

2 இட்லி போதும் என்கிறோம். ஆனால் 3வது இட்லியை வாயில் திணித்தால் குழந்தைகள் வாந்திதான் எடுப்பார்கள். எங்களுக்கு தேவையென்றால் நாங்கள் படிக்கிறோம். எங்களுக்கு அறிவுதான் முக்கியம். உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் ஒரு செல்போன் போதுமானது. எந்த மொழியில் கேள்வி கேட்க வேண்டும் என்றாலும் கூகுள் மூலம் மொழி பெயர்ப்பு செய்து பூர்த்தி செய்து கொள்ளலாம். தமிழ் என்பது அடையாளம். ஆங்கிலம் என்பது வாய்ப்புகள். தமிழன் என்று கூறுவதற்கு தாய்மொழி தமிழ் உள்ளது.

உலகம் முழுவதும் எனது கருத்தை கொண்டு செல்வதற்கு ஆங்கிலம் போதுமானதாக உள்ளது என நாங்கள் கூறுகிறோம். ஆனால் மத்திய அரசு 3-வது மொழி என கூறி ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கின்றனர். சமஸ்கிருதம் வந்தால் பிற்போக்கு சிந்தனைகள் வந்து விடும். புராண கதைகளை எடுத்து கூறி மாணவர்களை அறிவியல் சார்ந்து சிந்திக்க விடாமல் மழுங்கடிக்கும் பணிகளை அவர்கள் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து