Idhayam Matrimony

சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2025      உலகம்
Trump-Elan-Musk 2024 08 13

Source: provided

வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் வலதுசாரி செயற்பாட்டாளர் சார்லி கிர்க்கின் துக்க நிகழ்வில் சந்தித்தனர்.

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வலதுசாரி செயற்பாட்டாளர் சார்லி கிர்க் (31) செப்டம்பர் 10 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில், அரிசோனாவின் க்ளென்டேலில் உள்ள ஸ்டேட் ஃபார்ம் மைதானத்தில் நடந்த வலதுசாரி ஆர்வலரான சார்லி கிர்க்கின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக, அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்டா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் அருகருகே அமர்ந்து சிறிது நேரம் பேசினர்.

முன்னதாக அதிபர் ட்ரம்ப் அறிமுகம் செய்த "பிக் பியூட்டிஃபுல் பில்" என்ற மசோதாவை எலான் மஸ்க் மிகக் கடுமையாக எதிர்த்தார். இதன் காரணமாக ட்ரம்ப் அரசின் பதவியில் இருந்து விலகிய அவர், அதிபர் ட்ரம்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கருத்துகளையும் வெளியிட்டார். ட்ரம்ப்பும் எலான் மஸ்கை கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து புதிய கட்சியை தொடங்கப் போவதாகவும் மஸ்க் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து