முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரக உள்ளாட்சி தேர்தல்: 4 பொறுப்பாளர்களை நியமித்தார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு தே.மு.தி.க. சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு தே.மு.தி.க. சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.  வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.  திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.  காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கட்சியின் அவைத் தலைவர் வி.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.  கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து