முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னுடைய அதிர்ஷ்டம் - இயக்குனர் மோகன்ஜி

வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி ராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவுக்கு  ஜுபின் இசையமைத்திருக்கிறார். படம் குறித்து பேசிய இயக்குனர் மோகன்ஜி, இப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று வெளியாகிறது. நாயகி தர்ஷா குப்தாவே பின்னணி குரல் கொடுத்தார்.

இது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் கருதுவேன். ஏனெனில் நான் இயக்கிய 3 படங்களிலும் நாயகிகள் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார்கள். இதனால் தமிழ் பேசத் தெரிந்த நடிகர்களை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஊக்கமாக இருக்கிறது. தர்ஷா குப்தா படத்தில் 8 மாத கர்ப்பிணியாக கதையில் அறிமுகமாகி, ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார். படம் வெளியான பிறகு நிச்சயம் அவர் பேசப்படுவார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து