முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூத்த குடிமக்களுக்கு தனி ஹெல்ப்லைன்: துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 1 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்கு ‘எல்டர் லைன்’ என்ற பெயரில் ‘ஹெல்ப் லைன்’ வசதியை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘எல்டர் லைன்’ என்ற பெயரில் ஹெல்ப் லைன் வசதியை மத்திய அதிகாரமளித்தல் மற்றும் சமூகநீதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. முதியோருக்கான சர்வதேச தினமான நேற்று, நாடு முழுவதும் இந்த வசதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார். 

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனித்துவமான எண் (14567), ஒரே அழைப்பு மேலாண்மை ஆகியவற்றை கொண்டு, தேசிய அளவிலான கட்டமைப்பின் மூலம் மூத்த குடிமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில உதவி மையங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. ‘எல்டர் லைன்’ என்ற இந்த உதவி மையம் வாரத்தின் 7 நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். 14567 என்ற கட்டணமில்லா எண்ணில் இதனை தொடர்பு கொள்ளலாம்.

இந்த வசதி இரண்டு முக்கிய கூறுகளை கொண்டுள்ளது. முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அதிகாரிகள் அறிந்து கொள்வதற்கான ஒரு இணைப்பு மையமாக இது இருக்கும். மூத்த குடிமக்கள் கோரிய சேவைகளுக்கான கள ஆதரவை இந்த மையம் அளிக்கும். தெலங்கானா, தமிழ்நாடு, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 14567 என்ற கட்டணமில்லா எண்ணில் ‘எல்டர் லைன்’ வசதி செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.

 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து